நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள் வழங்கிய அநுதாபச் செய்தி

அன்புள்ளவர்களிற்கு,
சிவஸ்ரீ சண்முகநாத குருக்கள் அவர்களின் மறைவு அனைவரிற்கும் மன வேதனையை தந்தது. நல்லூர் வாழ் மக்களிற்கு மட்டும் அன்றி எங்கெங்கெல்லாம் தமிழன் வாழ்கின்றானோ அங்கெல்லாம் நல்லூர் முருகன் வாழ்கின்றார். அம்முருகனின் அருளை பெறுகின்ற அடியவர்கள் எல்லோருக்கும் ஐம்பது வருடங்களிற்கு மேலாக நித்திய பூசைகளையும் மகோற்சவ விழாக்களையும் நடத்தி அனைவரினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்தவர்.

பிராமண குலத்தில் பிறந்து, பிராமண குலத்துக்கு ஏற்ற ஆறு கடமைகளையும் - ஓதல், ஓதுவித்தல், ஈதல், ஏற்றல், வேட்டல், வேட்பித்தல் கடமைகளை - நிறைவாக செய்து குருத்துவ கல்வியை முறையாகப் பயின்று, குருக்களாக, குரு லட்சணத்துடன் வாழ்ந்த பெருமைக்குரிய சிவஸ்ரீ சண்முகநாத குருக்கள் நல்ல குடும்பத் தலைவராகவும், அயலவரிற்கு நல்ல நண்பனாகவும், எடுத்த விடயத்தை செவ்வனே ஆற்றும் செயல் வீரனாகவும் வாழ்ந்த பெருமைக்குரியவர்.

சிவஸ்ரீ சண்முகநாத குருக்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இவரின் மறைவு நினைவாக வெளியிடப்படும் மலர் சிறப்புடன் அமையவும், இவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.

சிவஸ்ரீ சண்முகநாத குருக்கள் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
(ஒ-ம்) ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள்
26-03-2006


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக